Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை …..!!

இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்த 9 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் அடிக்கடி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பார்கள். இவர்களுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். கொரோனா தோற்று உலகம் முழுவதும் பரவி வரும் இந்த நேரத்திலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்த சம்பவம் இந்திய ராணுவத்தினரை எரிச்சலடைய வைத்தது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதயில் நடைபெற்ற இந்த ஊடுருவல் சம்பத்தை சுதாரித்துக் கொண்ட இந்திய ராணுவம் 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தியது. தெற்கு காஷ்மீரின் பத்பூராவில் பயங்கரவாதிகள் 4 பேரை நேற்று இந்திய ராணுவம் சுட்டுக் சொல்லப்பட்ட நிலையில்  கொரான் செக்டார் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற மேலும் 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

Categories

Tech |