Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரத்திற்கு பின் கொரோனா பரவாது…. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தாமல் அப்படியே எரிக்கப்படுகிறது. ஆனால் ஏதாவது சட்டரீதியாக சந்தேகம் இருந்தால் அந்த உடலை அறுக்காமல் உடற்கூறு ஆய்வு செய்வதற்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதல்களை வகுத்தது. உடலை அறுத்து உடற்கூறு ஆய்வு செய்யும்போது அது மருத்துவர்கள், பிணவறை ஊழியர் கள் மற்றும் போலீசாரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகளை கண்ணியமான முறையில் நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. அதனால் 100க்கும் மேற்பட்ட உடல்கள் மீது தடயவியல் துறை வல்லுநர்கள் ஓராண்டுக்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து கொரோனா நோயாளிகள் இறந்து 24 மணி நேரத்திற்கு பிறகு அவரது உடல் மூலம் மற்றொருவருக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இல்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்த உடல்களை பரிசோதித்த தடயவியல் நிபுணர் சுதிர் குப்தா, இறந்தவர்களின் கண்ணியத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த ஆய்வை நடத்தியதாக கூறியுள்ளார்.

Categories

Tech |