Categories
அரசியல்

“24 பேர் கட்சியில் இருந்து நீக்கம்…!” அதிரடி காட்டிய அதிமுக தலைமை…!!

அதிமுகவின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் சுமார் 24 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சுமார் 24 அதிமுக உறுப்பினர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என அதிமுக தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“சென்னை, தூத்துக்குடி, சேலம்,திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 24 அதிமுகவினர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதோடு அவர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதாக பல்வேறு குற்றங்கள் எழுந்து வந்தன. இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது அதிமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.!” என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |