Categories
உலக செய்திகள்

23 நாடுகளுடன் சீனாவிற்கு எல்லை பிரச்சன்னை..!

எல்லை விரிவாக்கத்தில் அதீத ஆர்வம் காட்டும் சீனா 23 நாடுகளுடன் எல்லை  பிரச்சினையால் மோதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியா-சீனா:

கிட்டத்தட்ட 150-180 வருடங்களுக்கு முன்பாகவே மகாராஜா ஆட்சி காலத்தில் இருந்தே இந்த எல்லை பிரச்சனை ஆரம்பம் ஆகிவிட்டது. காஷ்மீர் மட்டுமல்லாமல் லடாக்,சிக்கிம்,அருணாசலப் பிரதேசம் இதுபோன்று தொடர்ச்சியாக பிரச்சினை இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து 1962ம் ஆண்டு ஒரு போரும் நடந்தது. பின்பு இதுவரை உரசல்கள் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

பூடான்-சீனா:

பூட்டானின் “டோக்லாம்” பகுதியை உரிமை கொண்டாடியது சீனா. இந்த பகுதி இந்தியா எல்லை, பூட்டான் எல்லை, மற்றும் சீன எல்லை இவை மூன்றும் ஒன்று சேரும் பகுதிக்கு மிக அருகில் உள்ள பூட்டானுக்கு சொந்தமான பகுதி. ஆனாலும் சீனா உரிமை கொண்டாடி வந்த சூழலில் இந்தியா ஒரு அரணாக பூட்டானை காப்பாற்றியது. அதைத் தொடர்ந்து சில பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது.

சீனா மற்றும் கிழக்கு சீனக்கடல்:

கடற்படை அதிகரித்து அதிகாரம் செலுத்த சீனா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியால் சக்திவாய்ந்த நாடுகளான தென் கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் சீனா தண்ணி காட்ட பார்க்கிறது என உலகளவில் ஒரு விமர்சனம் இருக்கிறது. இருந்தாலும் ஜப்பான், தென்கொரியா இரண்டு நாடுகளும் இந்த விவகாரத்தில் சீனாவுக்கு சற்றும் விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்கள்.

சீனா-தெற்கு சீன கடல்:

சீனாவுடன் 10 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த கடல் எல்லையை பகிர்ந்து வருகின்றனர். இயற்கை வளங்கள் நிறைந்த தீவுக்கூட்டங்கள் உள்ள பகுதி. இங்கு இரண்டு தீவுக்கூட்டம் உள்ளது. இந்த தீவுக் கூட்டங்கள் அதிக அளவிலான இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு தீவுக் கூட்டம். இதை உரிமை கொண்டாட சீனா மற்ற நாடுகளுடனும் தொடர்ந்து பிரச்சினை நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து சீனா தன்னுடைய கடற்படையை அங்கு  இறக்கி பல்வேறு விஷயங்கள் எல்லாம் நடத்தியதால் உலகளவில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானர். சீனாவுடன் தெற்கு சீன கடல் எல்லைகளை பகிர்ந்துகொள்ளும் இந்தோனேஷியா,மலேசியா,பிலிப்பைன்ஸ்,வியட்நாம் போன்ற சிறிய நாடுகள் இந்த விவகாரத்தில் விட்டுக் கொடுக்காமல் உறுதியாக உள்ளனர்.

சீனா-தைவான்:

தைவான் தன்னுடைய கடல் எல்லை விட்டுக் கொடுக்க கூடாது என்று ஒரு பக்கம்  போராடிகொண்டிருக்கையில் தைவான் நாடு தனக்கு சொந்தம் என சீனா கூறியது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தைவான் ஒரு சுதந்திர நாடு சீனாவின் ஒரு பகுதி கிடையாது என்ற நிலைப்பாடு உலக நாடுகளும் ஒப்புக் கொள்கின்றனர். தைவானை எப்படியாவது தன் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற ஒரு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது சீனா.

Categories

Tech |