சேலம் மாவட்டத்தில் உள்ள காந்தி சாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வைத்திருந்த 23 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய மற்றும் பழைய கேபிள் வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அலுவலக உதவி பொது மேலாளர் பாஸ்கரன் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அலுவலகத்தில் வேலை பார்க்கும் 3 காவலாளிகள் உட்பட நான்கு பேரை சந்தேகத்தின் பெயரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.