Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இந்த ராசிக்கு இன்று… மிகவும் “ராசியான நாள்”…. மற்ற ராசிகளை அறிய..!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம்,  ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் : 

அனைவரிடத்திலும் அன்பாக நடந்து கொள்ளும் மேஷ ராசி அன்பர்களே..!! இன்று தர்ம காரிய ஈடுபாடு வாழ்க்கையில் புதிய திருப்பங்களை த்தை ஏற்படுத்தும். எடுத்த காரியம் அனைத்துமே வெற்றி கிட்டும். பல வழிகளிலும் அதிக தனலாபம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக  செலவு செய்ய வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் இடைவெளி ஏற்படக்கூடும். பிள்ளைகள் அறிவுத்திறனை கண்டு ஆனந்த படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும். எதிர்பாராத செலவுகள் இன்று இருப்பதால் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். காரியத்தில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். அதையும் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் மனக்கவலை வந்து சேரும்.

இன்று காரியங்களை எதிர்கொள்ளும் போது பொறுமையாக எதிர்கொள்ளுங்கள். குடும்பத்தில் ஓரளவு கலகலப்பு காணப்படும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கு கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும் பாடங்களை நன்கு கவனித்துப் புரிந்து கொண்டு படியுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ ஆரஞ்சு நிற ஆடையோ அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையோ  எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் உங்களுக்கு அனைத்தும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

ரிஷபம் : 

தனது வசீகரப் பேச்சால் அனைவரையும் கவரக்கூடிய ரிஷப ராசி அன்பர்களே..!! இன்று மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வழக்குகளால் வெட்டி செலவுகள் ஏற்படும். அரசு மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் அலைச்சலுக்கு பிறகு நடந்த முடியும். இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உங்களுடைய வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை இன்று தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வரவேண்டிய பணம் வந்துசேரும். குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை கொடுப்பதாகவே இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும்.

இன்று மனமகிழ்ச்சியும் ஏற்படும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். கூர்ந்து பாடங்களை படிப்பது மிகவும் அவசியம். இன்று சக மாணவரிடம் பழகும் போது கொஞ்சம் கவனமாக பழகுங்கள். இன்று நீங்கள் முக்கியமான காரியங்களை மேற்கொள்ளும் போது முக்கியமான பணிக்கு செல்லும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து விதமான பிரச்னையும் சரியாகும். காரியத்தில் வெற்றி ஏற்படும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே முடியும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

மிதுனம் : 

மற்றவர்களை எளிதில் வசீகரிக்க  கூடிய மிதுனராசி அன்பர்களே.!! இன்று தன வரவுகூடும் நாளாக இருக்கும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெருகும். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். பெயரும் புகழும் அதிகரிக்கும். இன்று நீங்கள் எண்ணியதை  செய்து முடிக்க முடியாமல் தடங்களை கொஞ்சம் சந்திக்கக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பணவரவு நன்றாக இருக்கும் தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் தீர்வதற்கு பாடுபடுவீர்கள். ஆர்டர்கள்  பிடிப்பதற்கு அதிகமாக அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறனும் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி குறைய மனம்விட்டுப் பேசுவது நல்லது.

பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக இன்று நீங்கள் பாடுபட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் உழைப்பு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். கலகலப்பும் காணப்படும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கு கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பாடங்களை நன்கு கவனமாக படிப்பது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

கடகம் : 

மற்றவர்களை ஆனந்தமாக வைத்துக் கொள்ளும் கடக ராசி அன்பர்களே..!! இன்று புதிய சொத்துக்கள் சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களை கவர பரிசு திட்டங்களை அறிவிக்க கூடும். இன்று பயணங்களின்போதும், வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனமாகவும்,  எச்சரிக்கையாகவும் இருங்கள். அது போலவே இன்று புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.  அவர்களிடம் கொஞ்சம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும்.

வாடிக்கையாளரிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரத்திற்கு நன்கு உதவும். இன்று நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள் குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். குடும்பத்தில் உள்ள சின்ன சின்ன பிரச்சனைகள் தீரும். மனம் மகிழ்வும் ஏற்படும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது நீல நிறத்தில் ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் :  1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

சிம்மம் : 

நேர்மையான எண்ணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பொருள்கள் அனைத்தையும் திருடு போகாமல் பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது. தாயின் உடல்நிலையில் மிகுந்த அக்கறை வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். இன்று உங்களது செயல்கள் மற்றவர்கள் குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். இன்று நித்திரை கொஞ்சம் குறையக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியமான விஷயம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொண்டு சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். இன்று உங்களுடைய செயல் திறமை அதிகரிக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும்.

எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். தொழில் தொடர்பான செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். மனமகிழ்ச்சியும் காணப்படும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான காரியங்களை மேற்கொள்ளும் போது அல்லது முக்கியமான பணியைச் செய்யும் போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் சிறப்பை கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

கன்னி : 

எதைப்பற்றியும் கலங்கிடாத கன்னி ராசி நேயர்களே..!! இன்று பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் இருந்த தடை தாமதங்கள் நீங்கும். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகள் ஏற்படும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். காரியங்களை நிதானமாக செய்யுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் இன்று நீங்கள் ஆலய வழிபாட்டை மேற்கொண்டு வருவது சிறப்பு. குழந்தைகளுக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். பணவரவை பொருத்தவரை இன்று திருப்திகரமாகவே இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள். மனமகிழ்ச்சி ஏற்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள்.

வாகனத்தில்செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் பொழுதும் கவனம் இருக்கட்டும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம். அதை நீங்கள் மிகப் பொறுமையாக கடைபிடியுங்கள். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாக இருக்கும். குடும்பத்தாருடன் மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று மாணவர்கள் கல்வியில் இருந்த தடை விலகி கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்குவது மிகவும் சிறப்பு. அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக முடியும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் சிவப்பு நிறம்

துலாம் : 

மற்றவர்களுக்காக ஓடாய் உழைத்து தேய்ந்து கொண்டிருக்கும் துலாம் ராசி அன்பர்களே.!! இன்று குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். உங்கள் செயல்பாடுகள் சமூக விழிப்புணர்வோடு இருக்கும். தொழில் வியாபாரத்தில் கடின உழைப்பால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று வீண் செலவுகள் கொஞ்சம் உண்டாகும் பார்த்துக்கொள்ளுங்கள். சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும், எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். பங்கு சந்தையில் உள்ளவர்களுக்கு இன்று ஏற்ற தாழ்வு இருக்கும். ஏற்றுமதி  துறையை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடும். கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிற ஆடையோ அல்லது கைக்குட்டையை எடுத்து சென்றால் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் வெற்றி பெறக் கூடியதாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

விருச்சிகம் : 

தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருக்கக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று குடும்பத்தாரின் அர்ப்ப ஆசைகளால் வெட்டி செலவு ஏற்படும். பணியாளர்கள் வீண் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கக் கூடும். என்னதான் உழைத்தாலும் ஆதாயம் உங்களுக்கு பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு நிலுவையில் உள்ள பணம் வருவதில்  கொஞ்சம் தாமதப்பட்டு தான் வரும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் கொஞ்சம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். கோபம் கொஞ்சம் தலை தூக்கும் பொறுமையாக செயல்படுங்கள்.

நிதானமாக செயல்படுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். சக மாணவரிடம் கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது சிவப்பு நிற ஆடையை அணிந்து செல்லுங்கள். அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு வாருங்கள். அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும் தயவுசெய்து இதை மட்டும் செய்து பாருங்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

தனுசு : 

குடும்பத்திற்காக ஓடாய் உழைத்து தேய்ந்து போகும் தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அரசு வேலைக்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழிலில் அதிக முதலீடு செய்து ஆதாயமும் பெறுவீர்கள். விளம்பரத்தால் உங்கள் நிறுவனத்தின் புகழ் ஓங்கும். பதவி உயர்வுகள் எதிர்பார்க்கக் கூடும். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது மட்டும் நல்லது. பயணங்களின் போதும் உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். கலைப்பு பித்த நோய்கள் உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள். வயிற்று உப்புசமும் இருக்கும். வீண் கவலை கொஞ்சம் இருக்கும். மனதில் தேவையில்லாத பயம் இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

வெளி வட்டார தொடர்புகள் கொஞ்சம் கவனமாக இருங்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்று கோபம் கொஞ்சம் தலை தூக்குவதால் பொறுமையாக செயல்படுங்கள். அக்கம்பக்கத்தில் பேசும்போது நிதானமாகப் பேசுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாகதான் உழைக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான வேலைக்கு செல்லும்போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு வாருங்கள் இந்த நாள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

மகரம் : 

மனிதநேய மிக்க மகர ராசி அன்பர்களே..!! இன்று எல்லா காரியங்களுமே உங்களுக்கு அனுகூலமாகவே முடியும். அரசு ஆதரவு, முக்கிய நபர்களின் பதவி உயர்வு புதிய வேலைவாய்ப்பு, சாஸ்திர மந்திர வித்தைகளில் தேர்ச்சி போன்றவை இருக்கும். இன்று அனைத்து விஷயங்களும் சிறப்பாகவே காணப்படும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் மட்டும் கூடும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் வந்து செல்லும். தீவிர முயற்சி நல்ல பலனைக் கொடுக்கும். இன்று நீங்கள் மற்றவர்களை எளிதாக கவரக்கூடிய விதத்தில் இருப்பீர்கள். சக ஊழியரிடம் பேசும்போது நிதானமாகப் பேசுங்கள்.

இன்று வெளியூர் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். அதன் மூலம் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். தன வரவிற்கு  மட்டும் இன்றைய நாள் எந்த குறையும் இருக்காது. இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கூடுதலாக உழையுங்கள். படிப்பில் கவனத்தை செலுத்துங்கள். விளையாட்டை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் கல்வியில் நல்ல தேர்ச்சி பெற முடியும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகர் வழிபாட்டை  மேற்கொண்டு இன்றைய நாளை  தொடங்கினால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

கும்பம் : 

குதுகலமாக காணப்படும் கும்பராசி அன்பர்களே..!! இன்று கனிவான பேச்சால் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பல வழிகளிலும் பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். காதலில் வெற்றி கிடைக்கும். மனதுக்கு பிடித்த நவீன புத்தாடைகளை வாங்குவீ ர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் டென்சன் மட்டும் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வராமலிருக்க மனம்விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும்.

கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். இன்று ஓரளவு சிறப்பான நாளாக இருக்கும். மனம் மகிழ்ச்சி கொள்ளும் நாளாகவும் இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையாகவே செயல்படுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து சென்றால் அனைத்தும் சிறப்பாக நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு தொடங்கினால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் கருநீல நிறம்

மீனம் : 

கொடுத்த வேலையை சிறப்பாக செய்து கொடுக்கக் கூடிய மீனராசி அன்பர்களே.!! இன்று ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கலாம். மகிழ்ச்சி நிறைந்த நாளாகவும் இன்று அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். வீட்டிலும் வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இன்று கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மன கஷ்டம் கொஞ்சம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாகவே இன்று நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் சுமாராகவே இருக்கும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். மனம் ஓரளவு நிம்மதியாகவே காணப்படும்.

முடிந்தால் ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் சிரமப்பட்டு படியுங்கள். கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். விளையாட்டில் ஆர்வம் செல்லும். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு கல்வியில் இன்று ஆர்வம் கூட்டுங்கள். இன்றைய  நாள் ஓரளவு மகிழ்ச்சி பெறும் நாளாக இருக்கும். நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ  எடுத்து செல்லுங்கள். அது மட்டுமில்லை காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு வாருங்கள். இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். தயவுசெய்து இதை மட்டும் முயற்சி செய்யுங்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |