Categories
உலக செய்திகள்

23 வருஷமா சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்ட பெண்…. வியப்பூட்டும் தகவல்….!!!!

இங்கிலாந்தில் வசித்து வரும் இளம்பெண் ஜோ சாண்ட்லர் (25). இவருக்கு சிறுவயது முதலே சாண்ட்விச் மீது அதிக பிரியம் உண்டு. இதன் காரணமாக அவர் பள்ளிக்கூடத்தில் பயிலும்போது கூட லஞ்ச் பாக்சில் சாண்ட்விச்சுகளையே எடுத்து சென்றுள்ளார். சென்ற 23 வருடங்களாக சாண்ட்விச் மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்துள்ளார். அவரது 2 வயதிலிருந்து இப்பழக்கம் ஆரம்பித்துள்ளது. மற்ற உணவுகளை சாண்ட்லரின் பெற்றோர் அவருக்கு கொடுக்க முயற்சி செய்துள்ளனர். எனினும் சாண்ட்லர் அதனை ஏற்காமல் முகம் திருப்பிகொள்வார். ஏனெனில் மற்ற உணவுகள் உடல்ரீதியாக அவருக்கு ஒத்துகொள்ளவில்லை. ஆனால் எண்ணெயில் பொறிக்கப்பட்டு எடுக்கும் உருளைகிழங்கு வறுவலில் தினசரி 2 பேக் எடுத்து கொள்வார்.

மேலும் வெண்ணெய் தடவப்பட்ட பிரட் வகைகளை அவர் சாப்பிட்டு வருகிறார். இதுகுறித்து சாண்ட்லர் கூறியதாவது, “எனக்காக எனது தாயார் வாங்ககூடிய ஒரு பொருள் உருளைகிழங்கு வறுவலே ஆகும். அதனையும் மிருதுதன்மை வரும்வரையிலும் வாயில் போட்டு உறிஞ்சுவது வழக்கம். இதனிடையில் பள்ளியில் படிக்கும்போது என் உணவாக வெண்ணெய் தடவிய பிரட்டின் நடுவே வைக்கப்பட்ட உருளைகிழங்கு வறுவல்களையே (ஒரு வகையான சாண்ட்விச்) எடுத்து செல்வேன். அது ஒன்றையே நான் சாப்பிட விருப்பபடுவேன். மேலும் சிலநேரங்களில் காலை உணவாக உலர்ந்த தானியங்களை சாப்பிடுவேன். அதன்பின் மதிய உணவு, இரவு உணவாக மேற்கூறிய சாண்ட்விச்சுகளையே எடுத்துகொள்வேன்.

ஒருசில சமயங்களில் பாலாடைக்கட்டி மற்றும் வெங்காய வறுவல்களையும் சாப்பிடுவேன். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் அவருக்கு மூளை மற்றும் நரம்புகளை பாதிக்ககூடிய தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் நோய்தாக்கம் ஏற்பட்டுள்ளது. இது வாழ்நாள் முழுதும் நீடித்து இருக்கும் பாதிப்புகளை கொண்டது. இதனால் பயந்துபோன சாண்ட்லர் உடல்நலம் தேற மருத்துவர் டேவிட் கில்முர்ரி என்பவரை சந்தித்துள்ளார். அவர் அளித்த சிகிச்சையின் பலனாக முதல் முறையாக பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் பிற உணவுகளையும் சாண்ட்லர் சாப்பிட தொடங்கி இருக்கிறார்.

முதலில் சீச்சீ… இந்த பழம் புளிக்கும் என்று சொன்ன அவர், ஸ்டிராபெர்ரி பழங்கள் எவ்வளவு சுவையாக இருக்கின்றன என என்னால் நம்ப முடியவில்லை என கூறுகிறார். இவருக்கு ஏற்பட்டிருக்கும் நோய் நியோபோபியா என்று மருத்துவ உலகில் கூறப்படுகிறது. இச்சிகிச்சைக்கு பின் சாண்ட்லர், புளூபெர்ரி, ஸ்டிராபெர்ரி மற்றும் கிரான்பெர்ரி பழங்களையும், முட்டைகோசுகள், கடலைகள், பிற உணவுகளையும் எடுத்து வருகிறார். ஆகவே அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தன் திருமணத்தில் ஒரு முழு உணவையும் எடுத்துகொள்வேன்” என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |