Categories
மாநில செய்திகள்

23 ரயில் சேவைகள் நிறுத்தம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!!

திருச்சி அருகே உள்ள அரியலூர் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அந்தப் பாதையில் செல்லும் தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், திருவலம் பெண்ணையாற்றின் ரயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் இவ்வழியாக செல்லும் 23 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஆற்று பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணங்கள் பயணிகளுக்கு திருப்பித் தரப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரையிலிருந்து வருகிற 30, 31-ந் தேதி, அடுத்த மாதம் 6-ந் தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை – சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ. எண் 12636) மற்றும் குருவாயூரிலிருந்து ஜனவரி 9-ந் தேதி புறப்பட வேண்டிய குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ் (வ.எண் 16127) ஆகிய ரெயில்கள் மேற்கண்ட நாட்களில் திருச்சியில் இருந்து அரியலூர் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம் பாதை வழியாக இயக்கப்படும்.

Categories

Tech |