உலகம் முழுவதும்கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் விமான சேவையை நிறுத்தி வைத்தன. இதையடுத்து கொரோனா ஓரளவிற்கு குறைந்து வருவதன் காரணமாக மீண்டும் விமான சேவையானது ஒரு சில நாடுகளில் இயக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும் 23ம் தேதி முதல் மீண்டும் விமானத்தை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி ஏதாவது ஒரு தடுப்பூசி 2 டோஸ் எடுத்துக்கொண்டதற்கான சான்று கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சான்று விமானம் ஏறுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பும், விமானத்திலிருந்து இறங்கிய பின்பும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.