Categories
தேசிய செய்திகள்

ரூ22,500 கோடியில் திட்ட அறிக்கை…. 100 ரயில்வே வழித்தடங்கள்… இனி தனியாருக்கு சொந்தம்…!!

 

சென்னை-ஹவுரா சென்னை-ஹூக்கிலா உள்ளிட்ட 100 வழித்தடங்களில் தனியார் மூலம் ரயில்களை இயக்க நிதி ஆயோக் மற்றும் ரயில்வே துறை சார்பில் 22,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

 தனியார் பங்களிப்புடன் பயணிகள் ரயில் சேவை என்ற தலைப்பிலான அறிக்கை ஒன்றை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. அது தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் விவாதம் நடத்தப்பட உள்ளது. அந்த அறிக்கையின்படி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 100 வழித்தடங்கள் தனியார் இயக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் சந்தை அடிப்படையிலான கட்டணம் வசூலிக்கும் உரிமை முழுவதும் தனியாரிடம் அளிக்கப்படும் என்றும், இந்த ரயில்களை இயக்குவது உள்நாட்டு நிறுவனங்களாகவோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களாகவோ இருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |