22 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு மரணிக்கும் நிலைக்கும் சென்றுவிட்ட திருமண வாழ்க்கையில் சிக்கிய ஒருவருக்கு விவாகரத்து வழங்கி திருமணத்தை ரத்து செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்து திருமண சட்டம் மற்றும் சிறப்புத் திருமண சட்டத்தின் படி திருமண உறவு முறிவு விவாகரத்துக்கான காரணமாக ஏற்கப்படுவதில்லை. ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் 20 வருடங்களாக பல்வேறு நீதிமன்றங்களில் விவாகரத்து கோரிய நிலையில் அவரது மனைவி உடன்படாததால் விவாகரத்து மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மீளவே முடியாத திருமண உறவு முறிந்து விட்டால் விவாகரத்து பெறுவது நீதிக்கு உட்பட்டதாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
22 ஆண்டுகளாக கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தாலும் கூட விவாகரத்து வழங்கப்படுவதில் சட்டத்தில் குறைபாடு உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து 22 ஆண்டுகள் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்பதை ஏற்பதாக கூறுகின்றனர். இதை அடுத்து சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விவாகரத்து வழங்கி திருமண உறவை ரத்து செய்ததாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.