Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்… ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து… 22 பேர் உயிரிழப்பு..!!

நேபாளத்தில் 22 பேர் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் உள்ள முது மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் நேபாள் கஞ்ச் பகுதியிலிருந்து கம்கதி நகருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் பேருந்து சயநாத்ராரா பகுதியை கடக்க முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக பினா ஜயாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள் பேருந்தில் இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் பேருந்தில் பயணித்த 22 பேர் விபத்து காரணமாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். அதன் பிறகு விபத்தில் படுகாயமடைந்த 16 பேரை அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |