Categories
உலக செய்திகள்

கியூபாவில் பயங்கரம்…. ஓட்டலில் வெடிவிபத்து…. குழந்தை உட்பட 22 பேர் உயிரிழப்பு…!!!

கியூபாவில் ஒரு ஓட்டலில் வெடி விபத்து ஏற்பட்டதில், அருகில் இருந்த பள்ளிக்கூடம் சேதமடைந்து, குழந்தை உட்பட 22 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபா நாட்டின் தலைநகரான ஹவானாவில் இயங்கிவரும் சரடோகா என்ற ஹோட்டலில் நேற்று திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, சிறிது நேரத்தில் அந்த ஓட்டலின் ஒரு பகுதி இடிந்தது. உடனடியாக, மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் மாட்டிக்கொண்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

மேலும், ஓட்டல் கட்டிடத்தின் மாடிகளும் இடிந்து விழுந்தது. இதில் 21 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். 70க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வெடிவிபத்தானது, எரிவாயு கசிவால் ஏற்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஓட்டல் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்துள்ளது. அந்த ஓட்டலுக்கு அருகில் இருந்த பள்ளிக்கூடத்திலும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு குழந்தை பலியானதாகவும், 15 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு  தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |