Categories
தேசிய செய்திகள்

“22 ஆண்டுகளாக குளிக்காமல்”…. நான் செத்தாலும் குளிக்க மாட்டேன்… இதெல்லாம் ஒரு சபதமா?…..!!!!

பீகாரை சேர்ந்த தர்மதேவ் என்ற முதியவர் கடந்த 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கிறார். பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம் பைகுந்த்புரை சேர்ந்த இவர் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நில தகராறுகள் என்று தீர்கிறதோ அன்றைக்கு தான் குளிப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார். தன் மனைவி மற்றும் மகள் இறந்த போது கூட அவர் குளிக்காமல் தன் சபதத்தை காப்பாற்றி இருக்கிறார்.

22 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக உணர்ந்த அவர் 6 மாத காலம் ஒரு குருவிடம் சென்று தீட்சை பெற்றுள்ளார். அப்போதுதான் பெண்களுக்கு எதிரான இந்த குற்றம் குறையும் வரை குளிப்பதில்லை என்ற சபதத்தை எடுத்தாராம். தற்போது 62 வயதாகும் தரம்தேவ் இனிமேலும் அந்த சபதத்தை தொடரப்போவதாகக் கூறியுள்ளார்.

Categories

Tech |