2 கோடியே 10 லட்சம் பெண் வாக்காளர்கள் பெயரை காணவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கொண்டாடப்படும் மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிய நாள் முதல் தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்து பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்த நிலையில் அரசியல் காட்சிகள் தீவிர பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இந்திய நாட்டில் மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும் , புதிய வாக்காளர்கள் 1.5 கோடி பேர் இணைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது .ஆனால் தற்போது வந்த அதிர்ச்சிகரமான தகவல் என்ன வென்றால் இந்தியாவில் உள்ள மொத்த வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 2 கோடியே 10 லட்சம் பெண் வாக்காளர்கள் பெயரை காணவில்லை என்று எதிர்க்கட்சிகள் பரபரப்பு குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.இதிலும் குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் 68 லட்சம் பெண் வாக்காளர்கள் பெயர் இல்லை என்று கூறப்படுகின்றது. இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மோடி ஆட்சியில் பெண்களுக்கு இடமில்லை என்று ட்வீட் செய்துள்ளது.
மோடியின் ஆட்சியில் பெண்களுக்கு இடமில்லை. pic.twitter.com/83zuz7btOP
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) March 27, 2019