இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் தமிழகத்தைச் சேர்ந்த 21 வீரர்களை விடுவிக்க உத்தரவிட்டிருக்கிறது.
காரைக்கால் மற்றும் நாகை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 21 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, கடந்த மாதம் 31-ஆம் தேதியன்று இலங்கை கடற்படை கைது செய்தது. அதன்பின்பு, கைதுசெய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, நீதிமன்றத்தில் 21-ஆம் தேதி வரை அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்றுடன் தண்டனை முடிவடைந்து, மீனவர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.