ஊரடங்கு உத்தரவால் காஞ்சிபுரத்தில் உள்ள 30 ஆயிரம் நெசவாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்
ஊரடங்கு உத்தரவால் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பட்டு விற்பனை கடை மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்களும் மூடப்பட்டு விட்டதால் உற்பத்தி செய்த சேலைகளை எங்கு கொடுப்பது என்று புரியாமல் இருக்கிறார்கள் நெசவாளர்கள். தொழில் செய்ய முடியாமல் நெசவு தொழில் முடங்கியுள்ளது. இதனால் 30 ஆயிரம் நெசவாளர்கள் வேலை இன்றி தவிக்கின்றனர். எனவே நெசவாளர்களின் குடும்பங்களை காப்பாற்ற மானியமாக நெசவாளர்களுக்கு தலா 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று காஞ்சிபுரம் நெசவாளர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.