Categories
மாநில செய்திகள்

21 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை…. பழனி பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

பழனியில் நாளை முதல் தைப்பூச விழா நிறைவடையும் வரை அதாவது 21ஆம் தேதி வரை கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை எந்த வழிபாட்டு தளங்களிலும் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து வரும் 18ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவுக்கு அனுமதி இல்லை என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார் இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் கொடியேற்றத் திருவிழா பக்தர்கள் இல்லாமல் தான் நடைபெறும் எனவும் யூடியூப் சேனல் மூலமாக கொடியேற்றத்தை பார்த்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மண்டகப்படி பக்தர்களுக்கும் கோயிலில் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |