சட்டசபையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து கட்சியினரும் உரையாற்றி வருகின்றனர். இதில் தொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டசபையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தாக்கல் செய்தார். முதல்வர் மு.க ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான அதிமுக தனது முழு ஆதரவை வழங்கியது.
இதனைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பை அவையில் வாசிக்கத் தொடங்கினார். அதில் 2021-22 கல்வி ஆண்டில் 2098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏசி மற்றும் இதர மின் வசதிகள், புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் நவீன முறையில் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.