ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்திட்டு முழுமையாக சட்டமாக மாற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 ஆம் ஆண்டு பாமக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது, அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அரசு சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது அதற்கு ஆளுநர் இன்னும் கையெழுத்து இடாமல் உள்ளார். இதற்கு முன்பு அவசர சட்டத்தை கொண்டு வந்தார்கள். அதற்கு ஆளுநர் கையெழுத்து இட்டார். தற்போது இந்த மசோதாவிற்கு கையெழுத்து இட்டு முழுமையான சட்டமாக மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.