2024 ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்சாவும் தமிழகத்தில் இன்று போட்டியிட வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,தமிழகத்தில் இருந்து வீணாக, 39 பேர் எம்.பி.,யாகி உள்ளனர். அவர்கள், மத்திய அரசின் திட்டங்களை தொடர்ந்து எதிர்க்கின்றனர்.
இந்த நிலை மாற 2024 லோக்சபா் தேர்தலில், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், போட்டியிடுவதற்கு நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். அப்போதுதான் 40 தொகுதிகளும் பாஜக வசம் வரும். தமிழகமும் வளரும் என தெரிவித்துள்ளார். அப்படி மோடி மட்டும்அமித்ஷா போட்டியிட்டால் பாஜக வலுவாக இருக்கும் கோவை, குமரி அல்லது மதுரையில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.