நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீர் நுழைவுத் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . ஜே இ இ மெயின் முதற்கட்ட தேர்வு ஜனவரி 24ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்வு ஏப்ரல் ஆறாம் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது .
2023-2024ஆம் கல்வியாண்டில் சில முக்கிய தேர்வுகளுக்கான காலண்டரை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணையின் படி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(NEET) 2023 ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி NTA நடத்தும். பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை (CUET) 2023 ஆம் ஆண்டு மே 21 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும். இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய https://nta.ac.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.