Categories
தேசிய செய்திகள்

2022-ம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியல்…. இதோ நீங்களே பாருங்க….!!!!

ஒவ்வொரு புதிய ஆண்டு தொடங்குவதற்கு முன்பு அந்த ஆண்டிற்கான வங்கி விடுமுறைகள், மாநிலங்களுக்கான அரசு விடுமுறைகள் என ஒவ்வொரு விடுமுறை பட்டியலும் அதற்கு முந்தைய ஆண்டிலேயே வெளியிடப்படுவது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் இன்னும் ஒரு சில நாட்களில் வர இருக்கும் 2022 புதிய ஆண்டிற்கான விடுமுறை பட்டியலானது மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதாவது வரவிருக்கும் ஆண்டில் 16 அரசிதழ் விடுமுறைகள் மற்றும் 30 தடைசெய்யப்பட்ட விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அரசிதழ் விடுமுறைகள் என்பது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொது விடுமுறைகள் ஆகும். தடைசெய்யப்பட்ட விடுமுறைகள் அல்லது வரையறை செய்யப்பட்ட விடுமுறைகள் ஊழியர்களுக்குரிய விருப்ப விடுமுறை ஆகும். இந்த தினங்களில் அலுவலகம் மூடப்பட்டிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மத்திய பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ள 2022ம் ஆண்டிற்கான விடுமுறைகளான

1. ஜனவரி 1 – புத்தாண்டு

2. ஜனவரி 13 – லோஹ்ரி, போகி பண்டிகை

3. ஜனவரி 14 – மகர சங்கராந்தி, பொங்கல் பண்டிகை

4. ஜனவரி 26 – குடியரசு தினம்

5. மார்ச் 1 – மகா சிவராத்திரி

6. மார்ச் 18 – ஹோலி

7. ஏப்ரல் 2 – உகாதி

8. ஏப்ரல் 10 – ராம நவமி

9. ஏப்ரல் 14 – மகாவீர் ஜெயந்தி, விஷு, மேஷாதி

10. ஏப்ரல் 15 – புனித வெள்ளி

11. மே 3 – ரம்ஜான்

12. மே 16 – புத்த பூர்ணிமா

13. ஜூலை 10 – இத்-உல்-ஜுஹா, பக்ரீத்

14. ஆகஸ்ட் 9 – முஹர்ரம்

15. ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்

16. ஆகஸ்ட் 31 – விநாயகர் சதுர்த்தி

17. ஆகஸ்ட் 19 – ஜென்மாஷ்டமி

18. செப்டம்பர் 8 – ஓணம்

19. அக்டோபர் 2 – மகாத்மா காந்தி பிறந்தநாள்

20. அக்டோபர் 5 – தசரா

21. அக்டோபர் 24 – தீபாவளி

22. நவம்பர் 8 – குருநானக் ஜெயந்தி

23. டிசம்பர் 25 – கிறிஸ்துமஸ்

Categories

Tech |