2022-ம் நடைபெறவுள்ள போட்டி தேர்வுக்கான அட்டவணையை ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான அறிக்கை 2022 பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வெளியாகின்றது. அதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி மாதம் 22, 2022 ஆகும். இதைத்தொடர்ந்து ஜூன் 5ஆம் தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடைபெறும். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ்-க்கான முதன்மை தேர்வு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி நடைபெறும் என்று ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. எனவே சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்பும் இளைஞர்கள் தற்போது இருந்து தயாராகிக் கொள்ளுங்கள்.
Categories
2022 UPSC தேர்வுகள் அறிவிப்பு… வெளியான அட்டவணை…!!!
