சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு இந்த வருடத்தில் மருத்துவருக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாக, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு வழங்கப்படும். உலக நாடுகளை சேர்ந்த மனித உரிமை தலைவர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், புது முகங்கள், பொருளாதார வல்லுனர்கள் போன்றோர் நோபல் பரிசு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும்.
அதன்படி இந்த வருடத்தில் ஸ்வீடன் நாட்டின் ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அழிந்த ஹோமினின்களின் மரபணுக்களும், மனித பரிணாமம் தொடர்பிலும் அவரின் கண்டுபிடிப்புகளுக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் அமெரிக்க நாட்டினுடைய ஆர்டம் பட்டாபுடியான், டேவிட் ஜுலியஸ் ஆகிய இரு விஞ்ஞானிகள் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.