தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் மனதை வென்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் சாதனை புரிந்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி இந்த வருடம் ரிலீஸ் ஆன திரைப் படங்களில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் வேட்டை நடத்திய படங்களில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. இப்படம் சுமார் 500 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது.
இதனையடுத்து லோகேஷ் இயக்கத்தில், கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் 447.65 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து 2-ம் இடத்திலும், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 237.05 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து 3-ம் இடத்திலும், எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 200.25 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து 4-ம் இடத்திலும், சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் 179 கோடி ரூபாய் வரை வசூலித்து 5-ம் இடத்திலும் இருக்கிறது.
இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் 120 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து 6-ம் இடத்திலும், தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் 110 கோடி ரூபாய் வரை வசூலித்து 7-ம் இடத்திலும், கார்த்தி நடிப்பில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான சர்தார் திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து 8-ம் இடத்திலும் இருக்கிறது. மேலும் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று 90 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து 9-ம் இடத்திலும், தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் 60 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து 10-வது இடத்திலும் இருக்கிறது.