Categories
மாநில செய்திகள்

“2022-2023 பாமக நிழல் பட்ஜெட்”…. அப்படி என்னெல்லாம் இருக்கு?…. சில முக்கியமான அம்சங்கள் இதோ…..!!!!!

2022-2023 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை வருகிற 18ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்தநிலையில் பா.ம.க. தன் நிழல் பட்ஜெட்டை வெளியிட்டு இருக்கிறது.

பாமக வெளியிட்ட நிழல் பட்ஜெட்:

# தமிழ்நாட்டை 60 மாவட்டங்களாகப் பிரிக்கப்படும்.

# பெட்ரோல் விலை ரூபாய் 5 குறைக்கப்படும்.

# குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 2000.

# கல்லூரி மாணவிகளுக்கு ரூபாய் 1,000

# தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

# சென்னையில் மாநகர பேருந்துகளில் அனைவருக்கும் இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் பாமக வெளியிட்ட நிழல் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

# 2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வருவாய்க் கணக்கில் ரூபாய் 55,034 கோடி உபரியாக இருக்கும். நிதிப் பற்றாக்குறை ரூபாய் 18,326 கோடி என்ற அளவில் மிகக் குறைவாக இருக்கும்.

# தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவிதம் இடஒதுக்கீடு.

# தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கும் நோக்குடன் 2022-2023ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பெருக்க சிறப்பாண்டாக கடைபிடிக்கப்படும்.

# 2022-2023 ஆம் வருடத்தில் அரசுத் துறைகளில் 20,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

# முன்பே முடக்கி வைக்கப்பட்டு உள்ள 80,000 காலியிடங்கள் நிரப்பப்படும். அதன் வாயிலாக நடப்பு ஆண்டில் 1 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

 

Categories

Tech |