சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வரும் தென்னிந்திய திரைப்படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
விக்ரம் வேதா :-
விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகிய இரண்டு ஹீரோக்களின் நடிப்பில் ஹிட்டான “விக்ரம் வேதா” திரைப்படத்தை இயக்கிய புஷ்பா, காயத்ரி ஹிந்தியில் அதே பெயரில் “விக்ரம் வேதா” படத்தை ரீமேக் செய்ய உள்ளனர்.
சூரரை போற்று :-
சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த படத்தை ஹிந்தியில் சுதா கொங்கரா என்பவர் ரீமேக் செய்ய உள்ளார்.
அருவி :-
அதிதி பாலன் நடிப்பில் வெளியான “அருவி” திரைப்படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஈ நிவாஸ் ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்
ஹெலன் :-
மலையாளத்தில் வெளியான “ஹெலன்” என்ற படம் தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தை இப்போது கபூர் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறது.
கைதி :-
கார்த்திக் நடிப்பில் வெளியான “கைதி” திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
மாஸ்டர் :-
விஜய் சேதுபதி, விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” திரைப்படம் வசூலில் நல்ல சாதனை படைத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் ஹிந்தி
ரீ-மேக்கில் ஷாகித் கபூர் மற்றும் சல்மான் கான் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
யுடர்ன் :-
தெலுங்கில் சமந்தாவின் வித்தியாசமான நடிப்பில் வெளியான “யுடர்ன்” திரைப்படம் செம த்ரில்லாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஏக்தா கபூர் புரோடக்சன் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறது.
ஹிட் :-
ருஹானி சர்மா மற்றும் விஸ்வாக் சென் நடிப்பில் வெளியான ஹிட் திரைப்படம் திரில்லாக எடுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சானியா மல்கோத்ரா கதாநாயகியாகவும், ராஜ்குமார் ராவ் கதாநாயகனாகவும் நடிக்கிறார்கள்.