Categories
மாநில செய்திகள்

(2022) நீட் முதுநிலை கவுன்சிலிங் ஒதுக்கீடு…. எப்படி பார்ப்பது?…. இதோ வழிமுறைகள்….!!!!

மருத்துவ கலந்தாய்வுக்குழு  நடப்பு ஆண்டுக்கான தேசியத்தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் முதுநிலை படிப்புக்குரிய கவுன்சிலிங் இறுதி சீட் ஒதுக்கீட்டை அண்மையில் வெளியிட்டு இருந்தது. இதையடுத்து தமிழகத்தின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் முதுகலை படிப்புக்குரிய கவுன்சிலிங்கின் முதல் சுற்றில், அரசு ஒதுக்கீட்டுக்கான தற்காலிக சீட் ஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்த நீட் முதுநிலை 2022 முதல் சுற்றுக்கான தற்காலிக சீட் ஒதுக்கீடு பட்டியல், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் (DME) அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் (tnmedicalselection.net) வெளியாகி உள்ளது.

விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்பப்பதிவு எண், அவர் சார்ந்த சமூகம், அவரின் மருத்துவ சேவை விபரங்கள், மொத்த மதிப்பெண்கள், ரேங்க் மற்றும் ஒதுக்கப்பட்ட கல்லூரி போன்றவை அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகம் நீட் முதுநிலை முதல் சுற்றில் சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்கள், கல்விக்கட்டணத்தை செலுத்தி தற்காலிக சீட் ஒதுக்கீட்டு உத்தரவைப் பதிவிறக்கம் செய்து, அக்டோபர் 12ம் தேதிக்கு முன்னதாக ஒதுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சேரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நீட் முதுநிலை கவுன்சிலிங் ஒதுக்கீடு பார்க்கும் வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

# மருத்துவக்கல்வி இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்ல வேண்டும் tnmedicalselection.net.

# அந்த இணையத்தின் முகப்புபக்கத்தில் இருக்கும், தமிழ்நாடு நீட் முதுநிலை படிப்புக்கான சீட்ஒதுக்கீடு முடிவுகள் 2022 லின்க்-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

# உள் நுழைவுக்கு (Login) கேட்கப்படும் தகவல்களை உள்ளீடு செய்தபிறகு SUBMIT கொடுக்க வேண்டும்.

# பின் நீட் முதுகலை படிப்புக்குரிய சீட்ஒதுக்கீடு பட்டியலானது காண்பிக்கப்படும் .

# பட்டியலை பதிவிறக்கம் செய்து சீட் ஒதுக்கீடு முடிவின் பட்டியலின் நகலை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Categories

Tech |