Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2022 டி20 உலகக் கோப்பை : முதல் சுற்றில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் யார்?

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் மொத்தம் நடைபெற்ற 12 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இவர்கள் தான்..

ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் அனைத்து தகுதி சுற்று ஆட்டங்களும் முடிவடைந்து விட்டது.. இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து, நமிபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய 8 அணிகள் தகுதி சுற்றில் இடம்பெற்றன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோதியது.

இதில் குரூப் ஏ பிரிவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள்சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதேபோல குரூப் பி பிரிவில் இருந்த அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் குரூப் 1 பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, நியூசிலாந்து, இலங்கை ஆகிய 6 அணிகள் இடம் பிடித்துள்ளது. குரூப் 2 பிரிவில் வங்கதேசம், இந்தியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய 6 அணிகள் இடம்பெற்றுள்ளன.. ஒட்டுமொத்தமாக 12 அணிகள் சூப்பர் 12ல் இருக்கின்றன.
இந்நிலையில் இதுவரையில் தகுதிச்சுற்றில் மொத்தம் நடைபெற்ற 12 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களை பற்றி பார்ப்போம்..
 2022 டி20 உலகக் கோப்பை அதிக ரன்கள் & விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் :
சிக்கந்தர் ராசா – 3 இன்னிங்ஸ்களில் 136 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் (ஜிம்பாப்வே அணி)
மேக்ஸ் ஓ டவுட் – 3 இன்னிங்ஸ்களில் 129 ரன்கள் (நெதர்லாந்து அணி)
ஜார்ஜ் முன்சி – 3 இன்னிங்ஸ்களில் 121 ரன்கள் (ஸ்காட்லாந்து அணி)
வனிந்து ஹசரங்கா – 3 இன்னிங்ஸ்களில் 7 விக்கெட்டுகள் (இலங்கை அணி)
பாஸ் டி லீட் –  3 இன்னிங்ஸ்களில் 7 விக்கெட்டுகள் (நெதர்லாந்து அணி)

Categories

Tech |