Categories
தேசிய செய்திகள்

(2022) உலகின் 50 மகத்தான இடங்கள்: பட்டியலில் இடம்பிடித்த அகமதாபாத்…. மத்திய உள்துறை மந்திரி வாழ்த்து….!!!!

இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலகபாரம்பரிய நகரான அகமதாபாத், டைம் பத்திரிகையால் “2022ன் உலகின் 50 மகத்தான இடங்கள்” பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதாக நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இந்தியாவின் முதலாவது யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரான அகமதாபாத், டைம் பத்திரிகையால் 2022ன் உலகின் 50 மகத்தான இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், குறிப்பாக குஜராத் மக்களுக்கு மிகுந்த பெருமைக்குரிய விஷயம் ஆகும்.

ஆகவே அனைவருக்கும் வாழ்த்துக்கள் என அமித்ஷா டுவிட்டர் பதிவுகளில் தெரிவித்து உள்ளார். 2001-க்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு சிந்தனையால், குஜராத்தில் உலகத் தரம் வாய்ந்த அடிப்படை கட்டமைப்பு உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. அகமதாபாதில் சபர்மதி நதி முகத்துவாரம் (அல்லது) அறிவியல்நகர் என எதுவாயினும், மோடி எப்போதும் அடுத்த தலைமுறை கட்டமைப்பை உருவாக்குவதையும், இந்தியாவை எதிர்காலத்திற்கு தயார் செய்வதையும் வலியுறுத்தினார் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |