பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறு கிழமை அன்று இந்திய வானொலியில் ‘மனித குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றி வருகிறார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு மனிதனின் குரல் என்று நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சியை புதிய உச்சத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் நாம் அனைத்து வளங்களையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அனைத்து வளங்களையும் சரியாக பயன்படுத்தும் போது தான் அவற்றை வீணாக்க மாட்டோம். அப்போதுதான் உள்ளூர் சக்தியை அடையாளம் காண்போம் மற்றும் நாடு தன்னம்பிக்கையுடன் செயல்படும். அதுமட்டுமில்லாமல் பெரியதாக சிந்திக்கவும் பெரியதாக கனவு காணவும் அவற்றை நினைவாக்குவதற்காக கடினமாக உழைக்க என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேலும் 2022ஆம் ஆண்டு புதிய இந்தியாவை உருவாக்க ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும். அதனைத் தொடர்ந்து புத்தகம் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களை பாராட்டுகிறேன். இந்நிகழ்ச்சியை கேட்பவர்கள் இந்த ஆண்டு தங்களுக்கு பிடித்த 5 புத்தகங்களை குறிப்பிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இந்திய கலாச்சாரத்தை பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. மேலும ஒமைக்ரான் நமது வீட்டு கதவை தட்டுகிறது. எனவே நாம் அனைவரும் முழு ஒத்துழைப்புடன் எதிர் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். இந்த புதிய வைரஸ் குறித்து யாரும் பயப்பட தேவை இல்லை. ஆனால் முகக்கவசம் மற்றும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.