நம் நாட்டில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் ஆண், பெண் என இருபாலருக்கும் சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய பல திட்டங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீடுகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். அந்த பட்ஜெட்டில் பெண்கள் எந்த முன்னேற்றங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்? பெண்கள் கூர்மையாக கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் என்ன? இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இந்த பதிவில் விடை காணலாம்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் விகிதாசார வேலை இழப்புகளை கணக்கீடு செய்தால், பட்ஜெட் ஒதுக்கீடு அதற்கு ஏற்புடையதல்ல. மேலும் ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வீடுகளில் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதால் மகப்பேறு மற்றும் தாய், சேய் நல பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு பெண்களின் வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பட்ஜெட்டில் ஒரு பெரிய பங்கை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றே கூறலாம். இதையடுத்து பெண்களின் பிரச்சனைகளை தீர்க்கும் நோக்கத்தில் இந்த பட்ஜெட் ஒதுக்கீடுகள் அங்கீகரிக்கப்பட வேணும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பல பெண்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். மேலும் அவர்களின் நீண்டகால சமூகப் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.80C -யில் ஒரு சிறப்புப் பிரிவை சேர்த்து அதன் மூலம் அதன் பலன்களை சில ஆண்டுகளுக்கு பெண்களுக்கு அளிப்பது ஏதுவாக இருக்கும். இவற்றின் மூலம் அவர்கள் அதிகமாக சேமிக்க ஊக்குவிக்கும். இன்னொரு வழி பெண்களுக்கு ஒரு பெரிய நிலையான விலக்கை வழங்குவது இவற்றின் மூலம் குறைவான வரிகளில் காரணமாக பெண்களில் கையிருப்பில் அதிக பணம் இருக்கும். இதனால் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கொரோனா பெருந்தொற்று காலத்தின் இழப்புகளை பெண்களால் சரி செய்ய முடியும்.
மேலும் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனால் டிஜிட்டல் கல்வியறிவை அதிகரிப்பதற்கான திட்டங்களை சேர்ப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும். மேலும் திறன் வளர்ப்பு பட்டறைகள் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி திட்டங்களை அரசின்கீழ் அறிமுகப்படுத்தினால் தொழிலாளர் எண்ணிக்கையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க உதவும்.
மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் covid-19 கேசலோடின் கீழ் இணைக்கப்பட்டால் பல்வேறு சுகாதார சேவைகள் ஆன்லைனில் மாறியுள்ளன. பெண்கள் தங்களுடைய குடும்பத்தின் ஆரோக்கியம் தொடர்பான முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்க தேசிய சுகாதார திட்டத்தின் பட்ஜெட்டை உயர்த்துவது மிகவும் இன்றியமையாததாகும்.
இதையடுத்து மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பது, இதற்கான முயற்சிகளை எடுப்பது, போன்றவை மத்திய பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க நடவடிக்கைகளாக இருக்கும்.
மேலும் பாலின பிரிவை குறைத்தல் ,மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் பெண்களின் பாதுகாப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட வணிக வழிகளை குறைப்பதும் சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்வதும், பெண்கள் முன்னேற்றத்திற்கான திசையில் ஒரு நல்ல முன்னேற்றமாக இருக்கலாம். நாட்டிலுள்ள டயர் ,2 மற்றும் டயர் 3 நகரங்களில் உள்ள பெண்களுக்கு தங்கம் ஒரு மிகப் பெரிய முதலீட்டு கருவியாக உள்ளது என்றே கூறலாம். தங்கத்தைப் போன்று பெண்கள் ஆர்வத்தை கவரும் பொருள்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்களை மேலும் குறைப்பது, அவர்களது முதலீடுகளின் மீது பெண்களுக்கான கட்டுப்பாட்டையும், சுயாதீனத்தையும் அதிகரிக்கும்.