2020 முடிந்து 2021 பிறக்கும்போது இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். சில நாடுகளில் வித்தியாசமாக புத்தாண்டை வரவேற்கின்றனர். இப்படி செய்தால் அவர்கள் அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றனர். என்னென்ன என்பதை பார்ப்போம்.
தட்டு உடைத்தல்:
டென்மார்க்கில் புத்தாண்டை தடைகளை உடைத்து வரவேற்கின்றனர். இது மிகவும் புனிதமானது என்று கூறுகின்றனர். மக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வாசல்களில் தட்டுகளை உடைத்து இந்த ஆண்டு மிகவும் அதிர்ஷ்டம் ஆக இருக்கவேண்டும் என்று கருதுகின்றனர்.
ஜன்னலுக்கு வெளியே தண்ணீரை வீசுவது:
புத்தாண்டில் ஒவ்வொரு ஜன்னலுக்கு வெளியே வாளியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏனெனில் அவ்வாறு செய்தால் புனிதமானது என்று அவர்கள் கருதுகிறார்கள். தீய சக்திகள் அகற்றப்பட்டு நல்ல சக்திகள் வீட்டுக்குள் வருவதற்கு தண்ணீரை ஊற்றுகின்றனர்.
வெறும் சூட்கேசுடன் சுற்றி வருதல்:
கொலம்பியாவில் வெறும் சூட்கேசில் மக்கள் சுற்றி தருவதை அதிர்ஷ்டமாக கருதுகிறார்கள். இதனை ஒரு பாரம்பரியமாக அவர்கள் பின்பற்றுகிறார்கள். புத்தாண்டு அவர்கள் இவ்வாறு வரவேற்கின்றனர்.
அலைகளில் குதித்தல்:
பிரேசில் நாட்டு மக்கள் புத்தாண்டில் கடற்கரைக்கு சென்று கடலில் அலைகளின் மீது குதித்து ஒவ்வொரு அலைக்கும் ஆசை கேட்கும் ஒரு பாரம்பரியத்தை அவர்கள் செய்து புத்தாண்டை வரவேற்கின்றனர்.
வெள்ளை ஆடை அணிவது:
புத்தாண்டு தினத்தன்று பிரேசில் நாட்டு மக்கள் வெள்ளை ஆடையை அணிந்து புத்தாண்டு வரவேற்கின்றனர். இந்த ஆண்டு நல்ல அதிர்ஷ்டத்தை தரும் வகையில் அவர்கள் விரும்புகின்றனர்.
கதவுகள் திறந்து வைப்பது
பிலிப்பைன்ஸில் உள்ளவர்கள் புதிய ஆண்டின் முதல் நாளில் கதவுகள் ஜன்னல்களை திறந்து வைத்து அதிர்ஷ்டத்தை வரவேற்கின்றனர்.
விருப்ப கடிதத்தை ஜாடியில் வைத்தல்:
பல நாடுகளில் புத்தாண்டில் உங்கள் விருப்பத்தை ஒரு காகிதத்தில் எழுதி அதில் ஒரு ஜாடியில் வைத்து அந்த ஜாடி அடுத்த ஆண்டு வருவதற்கு முன் அதிலுள்ள ஆசைகள் நிறைவேறும் என்று நம்புகின்றனர். மேலும் அடுத்த ஆண்டு வருவதற்கு முதல்நாள் மாலை திறக்கப்படுகிறது.