Categories
உலக செய்திகள்

2021செல்வாக்கு மிக்க நபர்கள்… பட்டியலை வெளியிட்ட டைம் பத்திரிக்கை… பட்டியலில் இடம் பெற்றுள்ள இலங்கை தமிழ் பெண்…!

2021 ஆம் ஆண்டிற்கான டைம் பத்திரிக்கையின் உலக அடுத்த 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் இடம் பெற்றுள்ளார்.

கனடாவின் நெவெர் ஹவ் ஐ எவர் என்ற தொலைக்காட்சித் தொடரில் கதாநாயகியாக இலங்கை தமிழ் வம்சாவளியினரான மைத்ரேயி என்பவர் நடித்துக் கொண்டுள்ளார். 19 வயதுடைய மைத்ரேயி அந்த தொடரில் முதலாம் ஆண்டு தலைமுறை இந்தோ அமெரிக்க பெண்ணாக நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு காண நேர்காணலில் 15,000 பேர் கலந்து கொண்டனர். அதிலிருந்து ஒருவராக மைத்ரேயி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மைத்ரேயி குறித்து அந்த தொடரின் இணை தயாரிப்பாளரான மிண்டி கலிங் கூறியதாவது, மைத்ரேயி உடன் பேசும் போது ஒரு குட்டிப் பொண்ணுடன் பேசிக் கொண்டிருப்பது போல தான்  இருக்கும். ஆனால் அவரை திரையில் பார்க்கும்போது ஒரு பெரிய கலைஞரை போல் இருக்கும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான டைம் பத்திரிக்கையின் உலக அடுத்த 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில் மைத்ரேயி பெயர் இடம் பெற்றுள்ளது.

Categories

Tech |