இந்திய ரயில்வே 2021-2022 ஆம் வருடத்தில் 120 மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இது 2020-2021 ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களை விட 69 சதவீதம் குறைவு என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். கடந்த 2020-21 ஆம் வருடத்தில் இந்தியா முழுவதும் மொத்தம் 383 மாற்றுத்திறனாளிகளை ரயில்வே பணி அமர்த்தியுள்ளது என்று அவர் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
இந்திய ரயில்வே 2019-2020 ஆம் வருடத்தில் 1,053 மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016ஐ மீறும் வழக்குகள் எதுவும் ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு வரவில்லை என வைஷ்ணவ் குறிப்பிட்டள்ளார்.