Categories
பல்சுவை

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கிரிக்கெட் போட்டி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐந்து நாடுகளில் உள்ள கிரிக்கெட் வீராங்கனைகள் சேர்ந்து உலக தொடர் டி20 கிரிக்கெட் போட்டியை நடத்த உள்ளனர். இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா முதலிய நாட்டின் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கிரிக்கெட் தொடரை முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கர் பொறுப்பேற்று நடத்த உள்ளார். இதற்கு அனுமதி ஆனது  கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கிரிக்கெட் போட்டியில் நடக்கும் முதல் போட்டி இந்தியா மற்றும் மேற்கு இந்திய வீரர்களுக்கு இடையே நடைபெற உள்ளது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடக்கவிருக்கும் இந்தப் போட்டியின் முதல் ஆட்டம் மும்பையில் இருக்கும் வான்கடே மைதானத்தில் வைத்து  மார்ச் 7 நடைபெற உள்ளது.

இதனைத்தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்

Categories

Tech |