சென்னை அருகே சாதனை முயற்சியாக அப்துல் கலாமின் படத்தை 2020 கிலோவில் உருவாக்கியுள்ளனர்.
2020 ஆம் ஆண்டு இந்தியா வல்லரசு அடையவேண்டும் என கூறிய அப்துல்கலாமின் பேச்சை நினைவு படுத்தும் வகையில் போரூரை அடுத்த காட்டுப்பாக்கத்தில் தனியார் கேக் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த 30 பணியாளர்கள் சேர்ந்து ஏழு மணி நேரமாக இந்த கேக்கை தயாரித்தனர். ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடிக்கும் முயற்சியில் கேக் தயாரிக்கப்பட்டதாகவும் இந்த சாதனை முயற்சியின் மூலம் திரட்டப்படும் நிதியை எய்ட்ஸ் மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் செலவுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.