நடப்பு 2022 ஆம் நிதி ஆண்டில் இந்தியா மிகவும் வலுவான வளர்ச்சியடையும் என்று சர்வதேச நிதியம் கணித்திருக்கிறது. கொரானா பெருந்தொற்றின் காரமாக உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா முதல் உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரம் கடந்த 2020 ஆம் வருடம் கடுமையாக சரிந்துள்ளது. இந்த சூழலில் சர்வதேச நிதியம் 2022 ஆம் ஆண்டிற்கான பல்வேறு நாடுகளில் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி மிகவும் வலுவானதாக 8.2% இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்திருக்கின்றது.
இது சீனாவின் 4.4 வளர்ச்சியை விட இரண்டு மடங்கு வேகமாகும். இதன் மூலமாக உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதமாக இந்தியா மாறி இருக்கிறது. மேலும் 2021 இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.9% 2003 ஆம் வருடத்திற்குள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.90 ஆக இருக்கும் என சர்வதேச நிதியம் கூறியுள்ளது. உக்ரைன் போர் காரணமாக எரிசக்தி மற்றும் உணவு விலை உயர்ந்திருக்கின்றது.
இந்தியாவின் 2023 வளர்ச்சி குறைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 8.2% ஆக இருக்கும் என கூறப்பட்ட போதிலும் இது முன்பு கணிக்கப்பட்டதை காட்டிலும் 0.8% குறைவாகும். அதேபோல ஜப்பான் பொருளாதாரம் 0.9 சதவீதம் குறையும் என கூறப்பட்டிருக்கிறது. உள்நாட்டில் தேவை குறைந்திருப்பது மக்களின் நுகர்வு குறைந்து இருப்பதுமே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது. நடப்பு 2022 ஆம் வருடம் அடுத்த 2023 ஆம் ஆண்டிலும் சர்வதேச பொருளாதார வளர்ச்சி 3.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த 2021 பொருளாதார வளர்ச்சியான 6.1% குறைவாகும்.
மேலும் உக்ரைன் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரே இதற்கு முக்கிய காரணம் எனவும் கூறப்படுகின்றது. ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரம் வரும் 2022-ம் வருடம் மிக மோசமாக பாதிக்கப்படும் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. போரால் ஏற்பட்ட இழப்புகள் படையெடுப்புகள், உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டது இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது. அதேபோல உலக நாடுகள் விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகள் ரஷ்யாவின் சரிவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.