Categories
உலக செய்திகள்

2019 ல் நடந்த பெரும் கொள்ளைச்சம்பவம்.. அதிகாரிகளின் அதிரடியில் வசமாக மாட்டிய மர்ம கும்பல்..!!

ஸ்விட்சர்லாந்தில், கடந்த 2019 ஆம் வருடத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ஸ்விட்சர்லாந்தில் உள்ள லொசேன் நகரின் வடக்குப்பகுதியில், கடந்த 2019 ஆம் வருடத்தில் பணம் கொண்டு சென்ற டெய்லென்ஸில் சுவிஸ் போஸ்ட் வேனை வழிமறித்து மர்ம நபர்கள் சுமார் 20 மில்லியன் பிராங்குகள் மதிப்புடைய தங்க கட்டிகள், பணம் மற்றும் பல பொருட்களை திருடி சென்றுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை பல மாதங்களாக நடந்து வந்தது.

அதன்பின்பு ஜெனிவாவிற்கு அருகில் இருக்கும் அன்னேமாஸ் மற்றும் லியோன் போன்ற பகுதிகளில் தலைமறைவாக இருந்த 5 பிரஞ்ச் நபர்களை, பிரெஞ்சு மற்றும் சுவிஸ் காவல்துறையினர் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு, தற்போது கைது செய்துள்ளனர். இதனை வாட் மண்டல காவல் துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில், சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது சம்பவம் நடந்த அன்று கொள்ளை கும்பல் 2 வாகனத்தில் வந்து, ஸ்விஸ் போஸ்ட் வாகனத்தை வழிமறித்து துப்பாக்கியை காட்டி மிரட்டி அதன் ஓட்டுனர் உட்பட அனைவரையும் வெளியேற்றியிருக்கிறது.

அதன்பின்பு வெடிபொருளை வைத்து அந்த வாகனத்தை திறந்து, அதிலிருந்து CHF20 மில்லியன் மதிப்புடைய பணம், விலைமதிப்பில்லாத கற்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் தங்க கட்டிகள் போன்றவற்றை திருடிவிட்டு, அதன் பின் அங்கிருந்த மூன்று வாகனங்களையும் தீ வைத்து எரித்து பின்பே தப்பிச்சென்றுள்ளனர்.

Categories

Tech |