Categories
டெக்னாலஜி பல்சுவை

“2015 – 2020” 6,96,938 தாக்குதல்கள்….. உங்கள் பணத்துக்கு பாதுகாப்பு இல்லை…… உடனே இதை செய்யுங்க…..!!

சைபர் அட்டாக்கில் இருந்து உங்கள் போனை பாதுகாக்கும் வழிமுறைகளை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.

ஆப் டவுன்லோட்: எச்சரிக்கை தேவை

மொபைல் போனில் ஆப்களை நிறுவும்போது பல ஆப்ஸ்கள் கேமரா மற்றும் போட்டோக்களுக்கு ஆக்சிஸ் அனுமதி கேட்கும். அவை நம்பத்தகுந்த ஆப்களாக இல்லை எனில் அவற்றை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்கவும். ஒருவேளை நீங்கள் அனுமதி தருவதாக இருந்தால் வெளியிலிருந்து சைபர் தாக்குதல் கொடுப்பதற்கும்.முக்கிய தகவல்கள் திருடு போவதற்கும் வாய்ப்பு உள்ளது.

செக்யூரிட்டி ஆப் அவசியம்:

நீங்கள் டவுன்லோட் செய்யும் அழைப்புகள் மற்றும் ஆவணங்களை சோதித்து மால்வேர், ஸ்பைவேர் போன்ற ஆபத்தான மென்பொருட்கள் ஊடுருவி விட்டதா என்பதை அறிந்து கொள்ளும் மொபைல் செக்யூரிட்டி ஆப்களை ஒன்றை நிறுவிக் கொள்ள வேண்டும். மேலும் உங்கள் போன் தொலைந்துவிட்டால், தொலைவிலிருந்தே அவற்றின் இருப்பிடத்தை அறியவும். அவற்றை லாக் செய்து ரீசெட் செய்யவும் இது உதவும்.

சந்தேகத்திற்குரிய இணைப்புகளை திறக்க வேண்டாம்:

நீங்கள் ஒரு பரீட்சை அல்லது  விடுமுறை சுற்றுலாவை அல்லது லாட்டரி பரிசை வென்று விட்டதாகவும் அந்த ஆஃபரை பயன்படுத்த சொல்லியும், இணைய முகவரி இணைப்புகளை கிளிக் செய்யாதீர்கள். அப்படி செய்தால் ஆபத்தான மென்பொருட்கள் உங்கள் மொபைலை ஆக்கிரமிக்கும்.

இந்தியாவில் சைபர் தாக்குதல் விவரங்கள்:

2015 – 49,455
2016 – 50,362
2017 – 53,117
2018 – 2,08,456
2019 – 3,94,499
2020 – 6,96,938

பாஸ்கோட் பயன்படுத்துங்கள்:

போனில் எப்போதும் பாஸ்போர்ட் பயன்படுத்துங்கள். அப்போதுதான் உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் தகவல்கள் திருடு போகாமல் பாதுகாக்க முடியும். பெரும்பாலும் பாஸ்வேர்ட் பாதுகாப்பு இல்லாத மொபைல்களில் இருந்துதான் தகவல்கள் திருடப்படுகிறது.

இலவச வைஃபை பயன்பாடு தவிருங்கள்:

பொது இடங்களில் வழங்கப்படும் வைஃபை அல்லது பாதுகாப்பற்ற wi-fi சேவைகளை அதை தவிர்க்கவும். ஏனெனில் இந்த இடங்களை குறி வைக்கும் ஹேக்கர்கள், இந்த இணைப்பைப் பயன்படுத்துபவர்கள் வங்கி கணக்குகள், தொடர்பு எண்கள் மற்றும் விவரங்கள், பாஸ்வேர்ட் உள்ளிட்ட பல முக்கிய ஆதாரங்களை திருடுகின்றனர்.

பிரவுசிங் விவரத்தை நீக்குங்கள்:

இணையத்தில் உங்கள் தேடல் விவரங்களை அளிக்கும் பிரவுசிங் ஹிஸ்டரி, குகீஸ், கேஷ் மெமரி உள்ளிட்டவற்றை அடிக்கடி நீக்குங்கள். ஆபத்தான கண்களில் உங்களின் முக்கிய தகவல்கள் தெரியாமல் தடுக்க, இணையத்தில் உங்கள் காலடித்தடம் ஆக இருக்கும் மேற்கண்ட விவரங்களை நீக்குவது மிகவும் முக்கியம்.

Categories

Tech |