2004 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 10 முதல் 20 ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 9 ரஞ்சிப் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ. 5000 ஓய்வூதியம் வழங்க கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. பிசிசிஐ மூலம் நிதி பெற முடியாத தமிழக வீரர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள வீரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
2004 ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம்..!!
