வருடந்தோறும் 50 லிட்டர் பெட்ரோலை நீங்கள் இலவசமாக பெற ஒரு வழி இருக்கிறது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பெட்ரோல் பம்புகளில் இந்த இலவச பெட்ரோலை பெறலாம். நாட்டில் சுமார் ரூ.100-க்கு விற்கப்படும் 1 லிட்டர் பெட்ரோலை எப்படி இலவசமாகப் பெறுவது..? என்பது குறித்து நாம் பார்ப்போம். எச்டிஎப்சி வங்கி மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்றவற்றுக்கு இடையில் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்கள் இணைந்து கூட்டு முயற்சியால் Indian Oil HDFC Bank Credit Card அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வெகுமதி அடிப்படையிலான கிரெடிட்கார்டு என்றாலும் கூட தாங்கள் ஒவ்வொரு முறையும் கார்டை பயன்படுத்தி செலவழிக்கும்போது வெகுமதி புள்ளிகளை பெறுவீர்கள். நீங்கள் பெறும் எரிப்பொருள் புள்ளிகளுக்கு ஏற்றவாறு மீண்டும் எண்ணெய் வாங்கலாம். கார்டுதாரருக்கு மாதந்தோறும் கிடைக்கும் அதிகபட்ச எரிப்பொருள் புள்ளிகளின் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் 50 லிட்டர் வரை இலவச பெட்ரோலை பெற இயலும். இந்த எரிப்பொருள் புள்ளிகள் பயன்படுத்தி இந்தியா முழுவதும் உள்ள 20 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியன் ஆயில் பெட்ரோல் பம்புகளில் இலவச எரிப்பொருளை பெறலாம். நீங்கள் அதிகபட்சம் 50 லிட்டர் பெட்ரோல் (ஒரு வருடத்தில்) வரை பெற்றுக்கொள்ளலாம்.