Categories
சென்னை மாவட்ட செய்திகள்

20,000 ரூ லஞ்சமாக தர வேண்டும்….. கிராம நிர்வாக அலுவலர்….. அதிரடியாய் கைது செய்த போலீசார்….!!!!!!

 பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை  போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த உத்தண்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக உத்தண்டி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் என்பவரை நாடியுள்ளார். அப்போது அவர் பாட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூபாய் 20000 லஞ்சமாக தர வேண்டும் என ராஜேஷிடம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க மறுப்பு தெரிவித்த ராஜேஷ் இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீஸ் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ரமேஷிடம் கொடுப்பதற்காக ரசாயனம் தடவிய பணத்தை ராஜேஷிடம் கொடுத்து அனுப்பியதுடன் லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்து கண்காணித்துள்ளனர். இந்த சூழலில் பணத்தை ரமேஷ் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு துறை  போலீஸ் சுப்பிரன்ட் சங்கர் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும் லஞ்சம் வாங்கி தொடர்பாக ரமேஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |