மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 20,000 மேற்பட்ட பணியிடங்களுக்கான தேர்வை சமீபத்தில் அறிவித்தது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் www.ssc.nic.in என்ற இணையதளத்தில் அக்டோபர் எட்டாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் இந்த தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாட குறிப்புகள் அரசின் வேலைவாய்ப்பு துறை tamilnaducareerservices.tn.gov.inஎன்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி மூலமாக பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதனைப் போலவே TN Career Services Employment என்ற youtube சேனல் மூலமாகவும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் செயல்படும் தன்னார்வ வட்டங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.