10 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் காணாமல் போய் விட்டதாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானாவில் கொரோனா ரேபிட் டெஸ்ட் நடத்திய பின்னர், கடந்த 10 நாட்களில் மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.. இதில் கொடுமை என்னவென்றால், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்கள் அனைவருமே சோதனைக்கு வரும்போதே போலி முகவரியும், போலி தொலைபேசி எண்ணும் கொடுத்ததால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என சுகாதாரத் துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
கொரோனா தொற்று இருப்பது உறுதியானால் சமூகத்தில் உள்ளவர்கள் நம்மை ஒருவித அச்சத்துடனேயே பார்ப்பார்கள் என்ற பயத்தின் காரணமாக பெரும்பாலானோர் போலியான முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை கொடுத்துள்ளது தெரியவருகிறது.. தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் அரசுக்கு சரியாக ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும், அவர்கள் பொதுமக்களுடன் பொதுமக்களாக கலந்து இருந்தால் தொற்று மிகவும் வேகமாகப் பரவும் என்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் மயமாகியிருக்கும் சம்பவம் தெலங்கானா மக்களிடையை கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.