Categories
தேசிய செய்திகள்

“ரூ.‌ 200 கோடி மோசடி வழக்கு”…. பாலிவுட் நடிகை ஜாக்குலின் இன்று டெல்லி கோர்ட்டில் விசாரணைக்கு நேரில் ஆஜர்….!!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் சிறையில் இருக்கும் போது தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் ரூபாய் 200 கோடி வரை மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவி மீது அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பரிசு பொருட்களை நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் வாங்கி கொடுத்தது தெரியவந்தது.

இதன் காரணமாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் சுகேஷ் சந்திரசேகரின் உதவியாளர் பிங்கி இராணி ஆகியோரையும் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகையில் சேர்த்தனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக நடிகை ஜாக்குலின் இன்று டெல்லியில் உள்ள பாட்டியாலா கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

Categories

Tech |