Categories
உலக செய்திகள்

200 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி தவணைகள்…. இந்தியாவை பாராட்டிய உலக சுகாதார மையம்…!!!

இந்தியாவில் 200 கோடிக்கும் மேற்பட்ட கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பினுடைய தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் பாராட்டுகளை கூறியிருக்கிறார்.

உலக நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்கிறது. அதன்படி இந்தியாவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி தவணைகள் மக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனராக இருக்கும் பூனம் கேத்ரபால் இது பற்றி தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, இந்தியா சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி தவணைகளை செலுத்தியிருக்கிறது. அதற்காக வாழ்த்துக்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அந்நாடு செய்த அர்ப்பணிப்பிற்கும், முயற்சிக்கும் சான்றாக இது இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |