Categories
உலக செய்திகள்

200 கூகுள் ஊழியர்கள்… இணைந்து உருவாக்கிய… புதிய தொழிற்சங்கம்…!!

கூகுள் ஊழியர்கள் சுமார் 200 பேர் இணைந்து புதிய தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். 

அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட கூகுள் ஊழியர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இத்தொழில் சங்கத்திற்கு “ஆல்பாபெட் ஒர்க்கர்ஸ் யூனியன்” என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இச்சங்கத்தின் நிர்வாக தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் கூகுள் இன்ஜினியர்களான பருல்கோவுல் மற்றும் செவி ஷா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சங்கம் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நியாயமான ஊதியம் பெறுகிறார்களா? என்றும் தவறாக பயன்படுத்துதல் மற்றும் பாகுபாடு காட்டுதல் போன்ற அச்சமில்லாமல் பணியாற்றுவதை உறுதி செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது என்று இச்சங்கத்தின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் தற்போது வரை சுமார் 226 ஊழியர்கள் அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய தகவல் தொடர்பு மற்றும் ஊடக தொழிற்சங்கமான “கம்யூனிகேஷன் ஒர்க்கர்ஸ் ஆப் அமெரிக்கா”வுடன் இணைந்து ஆல்பாபெட் தொழிலாளர் சங்க அட்டைக்கு கையெழுத்திட்டுள்ளனர். மேலும் வளர்ந்து வரும் பல தொழிற்சங்கங்களை போன்று இல்லாமல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்து பேசுவதை எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் வருங்கால ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பதற்கான முறையான கட்டமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கம் என்று சங்கத்தின் நிர்வாக தலைவர் பருல் கோவுல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |