Categories
சினிமா தமிழ் சினிமா

“20 வருடங்கள்”…. மௌனம் பேசியதே முதல் பொன்னியின் செல்வன் வரை…. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை திரிஷா….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நடிகை திரிஷா. இவர் தன்னுடைய சினிமா பயணத்தில் தற்போது 20 வருடங்களை நிறைவு செய்துள்ளார். நடிகை திரிஷா லேசா லேசா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், கடந்த 2002-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு திருப்பாச்சி, கில்லி, ஆறு என பல வெற்றி படங்களில் நடித்த திரிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், ரஜினி, கமல், சூர்யா, விஜய், அஜித் மற்றும் விக்ரம் என அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து விட்டார்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகை திரிஷா குந்தவை வேடத்தில் நடித்திருந்த நிலையில், அக்கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை திரிஷா சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் திரிஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதன் காரணமாக நடிகை திரிஷா தனக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களின் இதயங்களில் நான் எப்போதும் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் மீது நீங்கள் காட்டும் அன்பை நான் கொண்டாடுகிறேன். நன்றி என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை திரிஷாவின் பதிவு தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |